( காரைதீவு  சகா)

இணைந்த கரங்கள் உறவுகளின் நிதிப்பங்களிப்பில் திருகோணமலை மூதூர் கல்வி வலயத்தில் உள்ள ஆதியம்மன் கேணி வித்தியாலய  பாடசாலை மாணவர்களில் 50 வறிய மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் மற்றும் புத்தகப்பைகள் வழங்கும் நிகழ்வு  பாடசாலையின் அதிபர்.  மா. வர்ண குலசிங்கம் தலைமையில்  நேற்று முன்தினம் இடம்பெற்றது.

 "எழ்மையை ஒழிப்போம் கல்வியை விதைப்போம்" எனும் தொனிப்பொருளில்  இணைந்த கரங்கள் அமைப்பானது மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை பல கஸ்ர பிரதேசங்களில்  உள்ள பாடசாலை மாணவர்களுக்கு கடந்த இரண்டு வருடங்களாக இணைந்த கரங்கள் அமைப்பானது உதவியினை வழங்கியிருந்தது.
மேலும் இப் பாடசாலையானது 138 வது பாடசாலையாகவும் இலங்கையில் இனமதம் மொழி பாராமல் பாடசாலை மாவர்களுக்கு கற்றல் உபகரணம் மற்றும் மேலதிக கல்வி செயற்பாட்டிற்காண உதவியினை வழங்கி  வருகின்றது.

மேலும் இந் நிகழ்வில் 
இணைந்த கரங்கள் அமைப்பின் உறுப்பினர்களான,
சி.காந்தன், லோ. கஜரூபன், எஸ்.சுரேஸ், மா.ஜெகனாதன் ஆகியோர் 
கலந்து கொண்டு 50 மாணவர்களுக்கான பாடசாலைக்கு செல்வதற்கான  கற்றல் உபகரணங்கள் மற்றும் புத்தகப்பை என்பன வழங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.



Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours