( வி.ரி.சகாதேவராஜா)
யாழ்ப்பாணம்
செல்வச் சந்நிதி ஆலயத்திலிருந்து கதிர்காமம் நோக்கி பாதயாத்திரை வந்து
கொண்டிருக்கின்ற அடியார்களுக்கு நாக தரிசனம் கிடைத்துள்ளது.
இச்சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மாங்கேணி எனுமிடத்தில் இடம் பெற்றுள்ளது.
பாதயாத்திரீகர்கள்
வழமைபோல 26 வது நாளாக பிரதான வீதி ஊடாக வந்து கொண்டிருக்கின்ற பொழுது
முன்னால் சென்ற சிறுவனுக்கு அந்நாகம் படம் எடுத்து காட்சி கொடுத்தது.
அவருக்கு பின்னால் வந்த 15 அடியார்கள் அதனை கண்டு வணங்கி இருக்கின்றார்கள்.
அதனை தொடர்ந்து அந்த நாகம் ஒருசில நிமிடங்களில் அந்தவிடத்தில் இருந்த ஆலமரத்தில் சென்று மறைந்து கொண்டது.
இதனையடுத்து
பாதயாத்திரை குழுத் தலைவர் ஜெயாவேல் சாமி அந்த இடத்திலேயே அரை மணி நேரம்
தரித்து நின்று அவருக்குரிய கிரியைகளையும் வணக்கங்களையும் தெரிவித்து அதன்
பின்பு அவரிடத்தில் இருந்து நகர்ந்தார்கள்
Post A Comment:
0 comments so far,add yours