வரலாற்று
பிரசித்தி பெற்ற " சின்னக் கதிர்காமம்" என அழைக்கப்படும் மண்டூர் ஸ்ரீ
முருகன் ஆலயத்துக்கான வருடாந்த தலபாதயாத்திரை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம்
17ஆம் தேதி சனிக்கிழமை காரைதீவிலிருந்து நடைபெற இருக்கிறது .
வரலாற்று
பிரசித்தி பெற்ற " சின்னக் கதிர்காமம்" என அழைக்கப்படும் மண்டூர் ஸ்ரீ
முருகன் ஆலய வருடாந்த மகோற்சவம் எதிர்வரும் 30 ஆம் தேதி கொடியேற்றத்துடன்
தொடங்கி 19 ஆம் தேதி தீர்த்தோற்சவத்துடன் நிறைவடைய விருக்கிறது.
காரைதீவில் இருந்து அதிகாலை நான்கு மணிக்கு ஆயிரக்கணக்கான பக்தர்களுடன் பாதயாத்திரை இடம் பெறுவது வழக்கம்.
காரைதீவு இந்து சமய விருத்திச்சங்கம் ஏனைய அமைப்புகளுடன் இணைந்து இந்த பாரிய பாதயாத்திரையை வருடாந்தம் நடத்தி வருகிறது.
காரைதீவிலிருந்து
அதிகாலை 4 மணிக்கு புறப்படும் பாதயாத்திரை கல்முனை நற்பிட்டிமுனை
சேனைக்குடியிருப்பு கிட்டங்கி நாவிதன்வெளி வேப்பையடி தம்பலவத்தை ஊடாக
மண்டூரைச் சென்றடையும்.
தம்பலவத்தையில்
பிரபல சட்டத்தரணி நடராசா சிவரஞ்சித்தின் அன்னதான நிகழ்வு இம் முறையும்
இடம்பெறும் என சங்க செயலாளர் கு. ஜெயராஜி தெரிவித்தார்.
Post A Comment:
0 comments so far,add yours