( வி.ரி.சகாதேவராஜா)
சம்மாந்துறை
வலய ஆரம்பநெறி உதவிக் கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.அப்துல் கபூர் தனது
60ஆவது வயதில் ஓய்வுபெறுவதையிட்டு வலயக்கல்விப் பணிமனையில்
பிரிவுபசாரநிகழ்வு நேற்று (10) புதன்கிழமை சம்மாந்துறை வலயக்கல்விப்
பணிப்பாளர் எஸ்.மகேந்திரகுமார் முன்னிலையில் இடம்பெற்றது.
சம்மாந்துறை
வலய கல்வி சார் உத்தியோகத்தர்களின் நலன்புரி ஒன்றிய தலைவரும், உதவிக்
கல்விப் பணிப்பாளருமான விபுலமாமணி தேசமான்ய வி.ரி.சகாதேவராஜா தலைமையில் இந்
நிகழ்வு நடைபெற்றது
சம்மாந்துறை
வலய பிரதிக் கல்விப்பணிப்பாளர்களான பி.பரமதயாளன், என்.எம்.நாசிர் அலி,
ஏ.எம்.மொகமட் சியாத் உள்ளிட்ட கல்வி சார் உத்தியோகத்தர்கள் கலந்து
சிறப்பித்தனர்.
ஓய்வுபெறும்
உதவிக் கல்விப் பணிப்பாளர் கபூர் தொடர்பாக பிரதிக் கல்விப் பணிப்பாளர்
பி.பரமதயாளன், இறக்காமம் கோட்டக் கல்விப்பணிப்பாளர் யூ.எல். மகுமூதுலெவ்வை,
உதவிக்கல்விப்பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா ஆகியோர்
உரையாற்றினர்.ஆரம்பநெறி ஆசிரிய ஆலோசகர் இசட்.எம்.றிஸ்வி கவிதையாற்றி
வாசித்தார்.
கபூரின்
அர்ப்பணிப்பான சேவையைப்பாராட்டி வலயக்கல்விப் பணிப்பாளர் மகேந்திரகுமார்
பொன்னாடை போர்த்திக்கௌரவித்தார். அத்துடன் நன்றியுடன் வாழ்த்துரை
வழங்கினார்.
24வருட காலம்
ஆசிரியப் பணியையும், 04 வருட காலம் ஆசிரியர் ஆலோசகர் பணியையும் ,06வருட
காலம் உதவிக் கல்விப் பணிப்பாளர் பணியையும் நிறைவு செய்து 2024.07.09ம்
திகதி ஓய்வு பெறும் கபூர் நல்லதொரு வளவாளராவார்.
உதவிக்
கல்விப் பணிப்பாளர் கபூர் ஏற்புரைநிகழ்த்துகையில் தான்
34வருடங்களுக்குமேல் கல்விச்சேவையாற்றியதாகவும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும்
யாருடனும் முரண்படவில்லை.மாறாக அனைவரும் ஒத்துழைப்பு நல்கியதாகவும்
தெரிவித்து நன்றி கூறினார்.
Post A Comment:
0 comments so far,add yours