(அஸ்ஹர் இப்றாஹிம்)


கல்முனை  விக்டோறியஸ் விளையாட்டு கழகத்தின் 42வது  ஆண்டு நிறைவினையொட்டி கடின பந்து சுற்றுப் போட்டி மற்றும் புதிய கிறிக்கட் சீருடை அறிமுக விழா என்பன கல்முனை சந்தாங்கேணி ஐக்கிய பொது விளையாட்டு மைதானத்தில் சிறப்பாக இடம்பெற்றது.

மேற்படி  நிகழ்வில் இடம்பெற்ற சினேக பூர்வ கிறிக்கட் போட்டியில் கல்முனை விக்டோறியஸ் மற்றும் கிண்ணியா நோவா கழகங்கள் பலப்பரீட்சையில் கலந்து கொள்ள விக்டோரியஸ் கழகம் வெற்றிவாகை சூடிக்கொண்டது..

நிகழ்வில் பிரதம அதிதிகளாக ஜனரஜ சுகாதார சங்கத்தின் கிழக்குமாகாண கௌரவ தலைவர் எஸ்.ஏ.உமீர் மமற்றும்காத்தான்குடி ஆதார வைத்தியசாலை வைத்திய  அத்தியட்சகர் டொக்டர் எம்.எஸ்.எம்.ஜாபிர் மற்றும் சிறப்பு அதிதிகளாக கல்முனை  விக்டோறியஸ் விளையாட்டுக் கழக தவிசாளர் பெஸ்டர் குழும பணிப்பாளர் ஏ.எம்.றியாஸ் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.
 விசேட அதிதிகளாக ஜெனுவீன் மோட்டார் நிறுவனர் விக்டோறியஸ் பிரதி தலைவர் ஏ.மன்சூர்,  கல்முனை Dfcc வங்கி உதவி முகாமையாளர் தேவமுரளி , மட்டக்களப்பு செலான்வங்கி உத்தியோகத்தர் ஜகோப் ,ஊவா வெல்லஸ்ஸ பல்கழைக்கழக பதிவாளர் ஹிபதுல் கரீம் , தாதி உத்தியோகத்தர் பாயிஸ்   நோவா ,கழக தலைவர் மிஹ்ளார் , கல்முனை  அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்திசாலை யூனியன் தலைவர் ஜலீல், பிர்ளியன் விளையாட்டுக்கழக தலைவர் பளீல், விக்டோறியஸ் கழக பொதுச் செயளாளர் ஏ.ஜே.எம்.சமீம், A  கழக முகாமையாளர் சபீர் ஆகியோர் கலந்து கொண்டனர்.


Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours