எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு


கிழக்கு பல்கலைக்கழகத்தில் புதிதாக நிர்மானிக்கப்பட்ட உள்ளக வீதிகள் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் அழைப்பின் பேரில் போக்குவரத்து மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்த்தனவின் பங்குபற்றுதலுடன் இன்று மாலை 5.30 மணிக்கு வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.

சுமார் 4.5 கிலோ மீற்றர் நீளமுடைய 370 மில்லியன் செலவில் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சினால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வீதி அபிவிருத்தி திணைக்களத்தினால் நிர்மானிக்கப்பட்ட கிழக்கு பல்கலைக்கழக சுகாதார பராமரிப்பு விஞ்ஞான பீடத்தின் பிள்ளையாரடியில் அமைந்துள்ள வளாகத்திலேயே குறித்த உள்ளக வீதிகள் இன்று (13) திகதி கிழக்கு பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் பேராசிரியர் வீ.கனகசிங்கம் தலைமையில் போக்குவரத்து மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்த்தனவினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், முன்னால் மாகாண சபை உறுப்பினர் பூ.பிரசாந்தன், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடக அமைச்சின் செயலாளர் ரஞ்சித் தங்கநாத் ரூபசிங்க  வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் உயர் அதிகாரிகள், கிழக்கு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டு இந்நிகழ்வை சிறப்பித்துள்ளனர்.




Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours