எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு


-ஆளுநர் செந்தில் தொண்டமான் வழிகாட்டலில் மீட்பு நடவடிக்கை  வெற்றி-

இஸ்ரேல் நாட்டில் இருந்து இலங்கைக்கு வருகை தந்த 25 வயதுடைய  பெண் சுற்றுலா பயணி 3 நாட்களுக்கு முன்பு திருகோணமலையில் மர்மமான முறையில்   காணாமல் போன நிலையில், இவ்விடயம் குறித்து இன்று ஆளுநரின் கவனத்திற்கு கொண்டு வந்ததை அடுத்து கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தலையீட்டில், 10 மணி நேரத்திற்குள் அப்பெண் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

பொலிஸ், இராணுவம், பிரதேச செயலகம், உப்புவேலி பிரதேச சபை,சுற்றுலாப் பணியகம் ஆகியவை மீட்பு பணி ஈடுபட   ஆளுநரால் பணிப்புரை  விடுக்கப்பட்டது.

ஆளுநரின் பணிப்புரைக்கு  அமைய, குறித்த தரப்பினர் தேடுதல் பணியில் ஈடுப்பட்டு, மர்மமான முறையில் காணாமல் போன பெண்ணை மயங்கிய நிலையில் சல்லி கோவிலுக்கு அருகில்  இன்று  மீட்டு எடுத்துள்ளனர்.

குறித்த சுற்றுலா பயணி மருத்துவ பரிசோதனையின் பின்,   அவருடைய நாட்டு தூதரகத்தில் ஒப்படைக்குமாறு ஆளுநரால் கிழக்கு மாகாண சுற்றுலா பணியத்திற்கு  பணிப்புரை விடுக்கப்பட்டது.
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours