கமலி

மட்டக்களப்பு ஒந்தாச்சிமடம் விநாயகர் மகா வித்தியாலயத்திற்கு டென்மார்க் நாட்டின் ஆசிரியர்  "மரியா அகர்கார்ட் " தலைமையிலான குழுவினர் விஜயம் செய்து  மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை அவதானித்து   பாராட்டுக்களை  தெரிவித்துடன் விளையாட்டு உபகரணங்களையும் வழங்கி வைத்தார் 

 
அதிபர் திருமதி மதிவதனி பிரபாகரன் இவர்கள் கொண்டதற்கு இணங்க  பாடசாலை வகுப்பறைகளைச் சென்று பார்வையிடுவதற்கான ஏற்பாடுகளை முன்னெடுத்திருந்தார்.
இதன் பிரகாரம் வகுப்பறைக்களுக்குச் சென்ற குழுவினர் மாணவர்களின் கல்வி நடவகடிக்கைகளை  ஆவலோடு பார்த்தும் கேட்டும் அறிந்து கொண்டனர்.

சுனாமியால் பாதிக்கப்பட்ட இப் பாடசாலையானது  டென்மார்க் நாட்டின் ரோட்டரி கழகத்தினரின் நிதி உதவியுடன் கட்டி  முடிக்கப்பட்டது அன்று  தொடக்கம் இன்றுவரை  இப் பாடசாலையை கண்காணித்து பராமரித்து வருகின்றனர். இதன் ஒரு அங்கமாகவே குறித்த குழுவினர் வருகை தந்திருந்தனர்.

இந் நிகழ்வில்  மட்டக்களப்பு நகர் ரோட்டரி கழக தலைவர்  ஜெயவண்ணன் தலைமையிலான கழக பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டிருந்தனர். இவர்கள் முன்னுரையாற்றும் போதே  ஆசிரியர் மரியா அகர்கார்ட்  கல்வி நடவடிக்கை தொடர்பில் பாராட்டுக்களைத் தெரிவித்தார்....




Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours