( வி.ரி.சகாதேவராஜா)
உலகளாவிய
இராமகிருஷ்ண மிஷனின் ஆறு துறவிகளின் முன்னிலையில் பெருந்துறவி கர்மயோகி
சுவாமி ஜீவனானந்தா ஜீயின் திருவுருவச் சிலை நாவற்குடாவில் நேற்று
சனிக்கிழமை (24) திறந்து வைக்கப்பட்டது.
இராமகிருஷ்ண
மிஷன் கொழும்பு மூத்த துறவி ஸ்ரீமத் சுவாமி இராஜேஸ்வரானாந்தா ஜீ,
தஞ்சாவூர் இராமகிருஷ்ண மிஷன் தலைவர் ஸ்ரீமத் சுவாமி விமூர்த்தானந்த ஜீ
மகராஜ், இலங்கை இராமகிருஷ்ண மிஷன் தலைவர் ஸ்ரீமத் சுவாமி அக்ஷராத்மானந்த ஜீ
மகராஜ், மட்டக்களப்பு கல்லடி ஆச்சிரம பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி
நீலமாதவானந்தா ஜீ மகராஜ் ,உதவி பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி
சுர்ச்சிதானந்த ஜீ மகராஜ் ,சுவாமி மாத்ருசேவானந்த ஜீ மகராஜ் ஆகிய ஆறு
துறவிகளின் முன்னிலையில் பெருந்துறவி கர்மயோகி சுவாமி ஜீவனானந்தா ஜீயின்
திருவுருவச் சிலை இத் திறப்பு விழா வேத பாராயணம் முழங்க கோலாகலமாக
நடைபெற்றது.
சுவாமி
ஜீவனானந்தஜி நூற்றாண்டு விழாச்சபையின் ஏற்பாட்டில் நடைபெற்ற விழாவில்
சுவாமிகளின் நினைவு மீட்டல் நிகழ்வு நாவற்குடா இந்து கலாச்சார மண்டபத்தில்
நடைபெற்றது.
பிரார்த்தனை ,
ஒளி தீபங்கள் ஏற்றும் நிகழ்வு இடம் பெற்றது, வரவேற்புரையை வருண்.
கமலதாஸ் ஆசியுரையை ஸ்ரீமத் சுவாமி அக்ஷராத்மானந்தஜி மகாராஜ் ,
தலைமையுரையை சுவாமி ஜீவனானந்தஜி நூற்றாண்டு விழாச்சபையின் பிரதித்தலைவர்
எஸ் , ஜெயராஜா ஆகியோர் நிகழ்த்தினர்.
மேலும் ஜீவனானந்தஜி மகாராஜ் அவர்களுடனான நினைவுப் பகிர்வுகளும் பதிவு செய்யப்பட்டன .
சுவாமி
ஜீவனானந்தஜி மகாராஜ் திரு உருவச்சிலையை வடிவமைக்க முழு நிதிப்பங்களிப்பு
செய்த கந்தையா கிருபைநாதன் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார் .
நன்றி உரையை சுவாமி ஜீவானந்தஜி நூற்றாண்டு விழாச்சபை செயலாளர் கண.வரதராஜன் வழங்கினார் .
Post A Comment:
0 comments so far,add yours