( வி.ரி.சகாதேவராஜா)
திருக்கோவில் பிரதேச செயலாளர் தங்கையா கஜேந்திரன் நேற்று சீனா பயணமானார்.

 சுற்றுலா வளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு எனும் கருத்திலான சர்வதேச பயிற்சி பட்டறை  ஆகஸ்ட் 29 தொடக்கம் செப்டம்பர் 11 வரை சீனாவில்  இடம்பெறுகிறது. 

இதில் கலந்து கொள்வதற்காக அம்பாறை மாவட்டத்தில் இருந்து 2 பிரதேச செயலாளர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள்.
திருக்கோவில் பிரதேச செயலாளர் தங்கையா கஜேந்திரன் மற்றும் சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்எல்எம்.ஹனிபா ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.

அரசாங்கத்தின் உரிமய தேசிய வேலைத் திட்டம் மற்றும் உற்பத்தி திறனாய்வு போட்டி மற்றும் சமுக பாதுகாப்பு சபை  ஆகியவற்றில் தேசிய ரீதியாகவும், சிறப்பாக செயற்பட்டவர் என்ற வகையில் இந்த தெரிவு இடம்பெற்று இருக்கின்றது.

வாழ்த்தி வழியனுப்பும் நிகழ்வு.


திருக்கோவில் பிரதேச செயலக உத்தியோகத்தர்களினால் பிரதேச செயலாளரை வாழ்த்தி  வழியனுப்பிவைக்கப்பட்டார்.
இந்நிகழ்வு உதவி பிரதேச செயலாளர் திருமதி எஸ்.நிருபா  தலைமையில் இடம்பெற்றது.
இரண்டு பிரதேச செயலாளர்களுக்கான விடுகை ஆவணங்களை அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக அபேவிக்ரம நேற்று முன்தினம் வழங்கி வைத்தார்.

அவர்கள் இருவரும் நேற்று சீனா பயணமானார்கள்.











Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours