( வி.ரி. சகாதேவராஜா)

 இந்தியா தஞ்சாவூர் இராமகிருஷ்ண மிஷன் தலைவர் ஸ்ரீமத் சுவாமி விமூர்த்தானந்தா ஜீ மகராஜ்  இன்று காரைதீவுக்கு விஜயம் செய்தார்.

இவரது ஆளுமைவிருத்தி தொடர்பிலான ஆன்மீகச்சொற்பொழிவு இன்று (26) திங்கட்கிழமை காலை காரைதீவு இகிமி.சாரதா நலன்புரி நிலையத்தில்  நடைபெற்றது.

சுவாமிகளுடன் இலங்கை இ.கி.மிசன் மூத்த துறவி ஸ்ரீமத் சுவாமி இராஜேஸ்வரானாந்த ஜீ மகராஜ் மட்டு.மாநில இ.கி.மிசன் மேலாளர்  ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தா ஜீ சுவாமி மாத்ருசேவானந்தர் ஜீ மகராஜ் ஆகியோரும் வருகைதந்திருந்தனர்.

முன்னதாக சுவாமிகள் காரைதீவு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலயத்தில் வழிபாடு செய்து பின்னர் முத்தமிழ்வித்தகர் சுவாமி விபுலாநந்த அடிகளார் பிறந்தவீட்டுக்கு விஜயம்செய்து சுவாமியின் திருவுருவச்சிலைக்கு மலர்மாலை அணிவித்துமரியாதை செலுத்தினர்.
தொடர்ந்து காரைதீவு ஸ்ரீ சாரதா நலன்புரி நிலையத்திற்கு விஜயம் செய்தனர்.

அங்கு சுவாமி விபுலாநந்தா பணிமன்ற முன்னாள் தலைவரும் தற்போதைய ஆலோசகரும் இ.கி.மிசன் சிவானந்தா பழையமாணவனுமான  வி.ரி.சகாதேவராஜாவின்  நெறிப்படுத்தலில் இவ் ஆன்மீகச்சொற்பொழிவு இடம்பெற்றது.

மட்டக்களப்பு ராமகிருஷ்ண மிஷன் கல்லடி ஆச்சிரம பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தா ஜீ மகராஜ் அறிமுக உரை நிகழ்த்தினர். தொடர்ந்து சுவாமி மாத்ருசேவானந்தா ஜீ மகராஜ் பஜனை பாடினார்.
இகிமி. அபிமானிகள் மாணவர்கள் கலந்து சொற்பொழிவை கேட்டு பயன் பெற்றனர்.

இறுதியில் பக்தர்கள் சுவாமிகளிடம் பாதநமஸ்காரம் செய்து இனிப்புகளைப் பெற்றுக்கொண்டனர்.






Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours