( வி.ரி .சகாதேவராஜா)
அவுஸ்திரேலிய
காரைதீவு மக்கள் ஒன்றியம்( ஒஸ்கார்) காரைதீவில் வசதி குறைந்த
மாணவர்களுக்கு ஒரு தொகுதி பாதணிகளையும் சீருடைகளையும் புலமைப்பரிசில் 14
வருட கால வினா விடை நூலையும் வழங்கி வைத்தது.
இந்நிகழ்வு விக்னேஸ்வரா வித்யாலயத்திலும், காரைதீவு விஷ்ணு வித்தியாலயத்திலும் இன்று (2) வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விக்னேஸ்வரா
வித்தியாலய நிகழ்வு அதிபர் எஸ். சிவயோகராஜா தலைமையிலும், விஷ்ணு வித்யாலய
நிகழ்வு அதிபர் எஸ். ரவீந்திரன் தலைமையிலும் நடைபெற்றது .
இந்த
இரு நிகழ்வுகளுக்கும் ஒஸ்கார் அமைப்பின் வேண்டுகோளுக்கு இணங்க உதவிக்
கல்விப்பணிப்பாளர் வி.ரி. சகாதேவராஜா பிரதமவிருந்தினராக கலந்து கொண்டு
வழங்கி வைத்தார்.
ஒஸ்கார் சார்பில் ஆசிரியர் கே. லோகநாதன், உ. சஜானந்த் ஆகியோர் ஏற்பாடுகளை செய்து கலந்து கொண்டனர்.
நிகழ்வில் ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இதனை
ஒஸ்கார் அமைப்பின் சமூக சேவைக்கான இணைப்பாளரும் முன்னாள் ஒஸ்கார்
தலைவருமான வீரக்குட்டி விவேகானந்தராஜா அவுஸ்திரேலியாவிலிருந்து
ஒழுங்கமைப்பு செய்து ஏற்பாடு செய்திருந்தார்
ஒஸ்கார் தலைவர் கந்தசாமி பத்மநாதன் தலைமையிலான ஒஸ்கர் குழுவினர் இன்னொரன்ன பல சேவைகளை செய்து வருகின்றார்கள்
Post A Comment:
0 comments so far,add yours