சுவிஸ் உதயம் அமைப்பின் ஏற்பாட்டில் சுவிஸ் உதயம் அமைப்பின் தாய்ச்சங்கத்தின் பொருளாளர் சமூகசேவகர் தொழிலதிபர் க.துரைநாயகம் அவர்களின் பிறந்ததினத்தினை முன்னிட்டு வாகரைப்பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கதிரவெளிக்கிராமத்தில் இருப்பிடமற்ற குடும்பமொன்றிற்கு வீட்டுடன் கூடிய கடைத்தொகுதியொன்றினை தனது சொந்த நிதியில் நிர்மானித்து கையளிக்கும் நிகழ்வு  03.08.2024 சனிக்கிழமை சுவிஸ் உதயம் அமைப்பின் கிழக்குமாகாணக்கிளையின் ஆலோசகர் பாவாணர் அக்கரைப்பாக்கியன் தலைமையில் இடம்பெற்றது

கடந்தகால போர்ச்சூழலினால் பாதிக்கப்பட்டு பொருளாதாரத்தில் மீட்சிபெறமுடியாத நிலையில் இருந்த குடும்பத்தினை இனங்கண்டு அவரினால் இவ் உதவித்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது

இந்நிகழ்வில் சுவிஸ் உதயம் அமைப்பின் தாய்ச்சங்கத்தின் பொருளாளர் சமூகசேவகர் தொழிலதிபர் க.துரைநாயகம் அவரது பாரியார் நிதிவதனி சுவிஸ் உதயத்தின் தாய்ச்சங்க உறுப்பினர் வண்ணன் கிழக்குமாகாணக்கிளையின் செயலாளர் றொமிலா செங்கமலன் பிரதிச்செயலாளர் ஊடகவியலாளர் சா.நடனசபேசன் உறுப்பினர்களான அதிபர் இ.ஜீவராஜ் யுதர்சன் கண்ணன் ஊடகவியலாளர் வா.கிருஷ்ணகுமார் உட்பட பலர் கலந்து சிறப்பித்தனர்.

அதேவேளை இவ் உதவியினை வழங்கிவைத்த சமூகசேவகர் தொழிலதிபர் க.துரைநாயகம் அவரது பாரியார் நிதிவதனி இதனைப் பெற்றுக்கொள்ள உதவி சன்ரே விடுதியின் தொழிலாளர் லேகன் ஆகியோருக்கு அக்குடும்பத்தினர் நன்றிதெரிவித்துள்ளனர்.

















Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours