( வி.ரி.சகாதேவராஜா)
கிழக்கு
பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தர் அழகியல் க ற்கை நிறுவகத்திற்கு விஜயம்
செய்த தஞ்சாவூர் இராமகிருஷ்ண மிஷன் தலைவர் ஸ்ரீமத் சுவாமி விமூர்த்தானந்த
ஜீ மகராஜ் சுயமுன்னேற்றத் திற்கான ஊக்கச் சொற்பொழிவை( Self Motivational
Speech) நிகழ்த்தினார்.
முன்னதாக அங்குள்ள சுவாமி விபுலானந்த அடிகளாரின் திருவருவச்சிலைக்கு மலர் மாலை அணிவித்து வணங்கினார்.
பின்னர் , இராசதுரை அரங்கில் நிறுவகப் பணிப்பாளர் கலாநிதி ப்ளோரன்ஸ் பாரதி கென்னடி தலைமையில் இந்த நிகழ்ச்சி இடம்பெற்றது.
அங்கு அனைவரும் பாராட்டத்தக்க வகையில் ஊக்கச் சொற்பொழிவை சுவாமிகள் நிகழ்த்தினார் .
அதன் போது சுவாமி மாத்ருசேவானந்த ஜீயும் கலந்து சிறப்பித்தார்.
Post A Comment:
0 comments so far,add yours