(றாசிக் நபாயிஸ்,
றியாஸ் ஆதம்)

31 வருட காலம் வைத்தியத் துறையில் தன்னை அர்ப்பணித்து சேவையாற்றிய டொக்டர் உவைசுல் பாரி
அவர்களுக்கான பிரியாவிடை நிகழ்வு இன்று (24) மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரியின் மருதூர் கொத்தன் கலையரங்கில் மருதமுனை பிரதேச  வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரியும் பிரதேச வைத்தியசாலையின் அபிவிருத்தி குழுவின் தலைவருமான ஏ.எல்.எம். மிஹ்லார் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வின் பிரதம அதிதியாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின்
பணிப்பாளர் டொக்டர் ஸஹீலா ராணி இஸ்ஸடீன், கெளரவ அதிதியாக பிராந்திய கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் எம்.சி.எம். மாஹிர், மருதமுனை வைத்தியசாலையின் வைத்தியர்களான ஏ.எம்.எம். அஸ்ஹர், ஏ.புஸைறா ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வின் சிறப்பு அதிதிகளாக 
கலந்து கொண்ட மருதமுனை வைத்தியசாலையின் அபிவிருத்திக் குழுவின் உப தலைவரும்
பேராசிரியருமான, எஸ்.எம். ஜூனைடீன்,
அபிவிருத்திக் குழுவின் செயலாளரும் அபிவிருத்தி உத்தியோகத்தருமான பி.எம். யாசிர் அறபாத் மற்றும் சரோ பாம் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் எம்.எச். தாஜுடீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் பிரியாவிடை நிகழ்வின் கதாநாயகன் 
டொக்டர் உவைசுல் பாரி அவர்கள் மருதமுனை வைத்தியசாலையில் தனது சேவைக் காலத்தில் 24 வருடங்கள் தனது சேவையை மருதமுனை வைத்தியசாலைக்கு  செய்தமைக்காக
அவருக்கான நினைவுச் சின்னங்களும் வழங்கப்பட்டு பொன்னாடையும் போர்த்தி கெளரவிக்கப்பட்டார்.

இதன் போது வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களில் சிறப்பாக சேவையாற்றியவர்களுக்ககு சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.

பிரதேச வைத்திய அதிகாரியும், வைத்திய அதிகாரிகளும், தாதி உத்தியோகத்தர்களும், சக ஊழியர்களும், மருதமுனை வைத்திய சாலையின் அபிவிருத்தி குழுவின் உறுப்பினர்கள் மற்றும் டொக்டர் உவைசுல் பாரி அவர்களின் துணைவி, குடும்ப உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டு இந்நிகழ்வை சிறப்பித்தார்கள்.




Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours