கிழக்குமாகாண கல்வித்திணைக்களத்தினால் சம்மாந்துறை கல்வி வலய அதிபர்களுக்கு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் அடைவு மட்டத்தினை அதிகரிக்கும் நோக்கில் தெளிவூட்டும் செயலமர்வு சம்மாந்துறை வலயக்கல்வி அலுவலகத்தின் ஒழுங்கமைப்பிலும் கிழக்குமாகாண கல்வித்திணைக்கள அதிகாரிகளின் பங்குபற்றலுடன் சம்மாந்துறை அல்மறிஜான் தேசிய பாடசாலையில் வெள்ளிக்கிழமை காலை வலயக்கல்விப்பணிப்பாளர் எஸ்.மகேந்திரகுமார் தலைமையில் நடைபெற்றது.
இதற்கு வலயத்தில் உள்ள ஆரம்பப்பிரிவுக்கான 65 பாடசாலைகளின் அதிபர்கள் கலந்துகொண்டதுடன் கிழக்குமாகாணக் கல்வித்திணைக்களத்தின் மேலதிக கல்விப்பணிப்பாளர் கஜெயவதனன் சம்மாந்துறை கல்விவலயத்தின் பிரதிக் கல்விப்பணிப்பாளரும் நாவிதன்வெளிக்கோட்டக் கல்விப்பணிப்பாளருமான பி.பரமதயாளன் பிரதிக்கல்விப்பணிப்பாளர்களான எச் .நைரோஸ்கான் ஏ.எம்.எம் .சியாத், நாஷீர் அலி ,ஏ.சி.என் நிலோபறா மற்றும் ஆசிரிய ஆலோசகர்கள் கலந்து சிறப்பித்தனர்.
இத்தெளிவூட்டும் செயலமர்வின் நோக்கம் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் கிழக்குமாகாணத்தின் அடைவினை முன்னிலைக்கு கொண்டுவருவதேயாகும்
Post A Comment:
0 comments so far,add yours