( வி.ரி. சகாதேவராஜா)

உண்மை மற்றும் நல்லிணக்க பொறிமுறையின் இடைக்காலச் செயலகத்தின் செயலமர்வு 
திருக்கோவில் பிரதேச செயலாளர் .தங்கையா கஜேந்திரன் தலைமையில் நேற்று முன்தினம் இடம்பெற்றது

இந்நிகழ்வில் ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரஞ்சித் ஆரியரத்ன, டாக்டர் யூ.வி.தங்கராசா (Head of Policy), ZAF. வஸ்னியா (Senior Legal Advisor), கொத்தலாவல (Coordinator of President Secretariat) ஆகியோர் பிரதானி களாக கலந்து சிறப்பித்தார்கள்.


மேலும் திருக்கோவில் பிரதேச செயலக 
உதவி பிரதேச செயலாளர் திருமதி எஸ்.நிருபா உதவி திட்டமிடல் பணிப்பாளர்  திருமதி.அனோஜா உஷாந்த் கிராம நிர்வாக உத்தியோகத்தர் ஏ.கந்தசாமி  பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர் 

இதன்போது பங்கேற்பாளர்கள் தங்கள் எண்ணங்கள் அனுபவங்கள் மற்றும் உண்மை மற்றும் நல்லிணக்க செயல்முறை தொடர்பாக  பரிந்துரைகளை பகிர்ந்து கொண்டனர்.





Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours