11/08/2024 நடாத்திய தரம்-05 மாணவர்களுக்கான புலமைப் பரிசில் பரீட்சை யினை எதிர்கொள்வதற்கான இலவச கருத்தரங்கு. துறைநீலாவணை பாம் ஹவுஸ் உரிமையாளர் அருச்சுனன் வேணுப்பிரியன் அவர்கள் அனுசரணையினை வழங்கினார்.வளவாளராக புலமைப்பாதை பிரதம ஆசிரியர் S. அஜீந்தன் அவர்கள் கலந்து சிறப்பித்தார்...
மேலும் இன்றைய கருத்தரங்கனை மிகவும் சிறப்பாக நடாத்தி முடிப்பதற்கு பாடசாலை கட்டிட தொகுதியினை தந்து உதவிய துறை நீலாவணை மெதடிஸ்த மிஷன் தமிழ் கலவன் பாடசாலை அதிபர் அவர்களுக்கும், மாணவர்களை உரிய நேரத்துக்கு அனுப்பி வைத்த பாடசாலைகளின் அதிபர்களுக்கும் இந்த வேளையில் நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.
இந்த கருத்தரங்கு தொடர்ச்சியின் அடுத்த கருத்துரங்கு எதிர்வரும் 18/08/2024 அன்று இதே பாடசாலையில் இடம் பெறும்.
Post A Comment:
0 comments so far,add yours