( வி.ரி. சகாதேவராஜா) 

ஒன்லைன் கல்வி வசதியை இலவசமாக வழங்கும் கனடா எழுத்தாணி பிரதிநிதிகளுக்கு லுணுகலையில்  கொழுந்து மாலை அணிவித்து வரவேற்பளிக்கப்பட்டது .

 கனடாவைச் சேர்ந்த அஜந்தன்
கௌரி அஜந்தன் தம்பதியினரின் புதல்வி அஜேனி 
 எழுத்தாணி அமைப்பின் ஊடாக மலையக மாணவர்களுக்கு இணையத்தில் கல்வி கற்பிக்கும் ஆசிரியை.

அவர் அங்கிருந்து கணிதம் விஞ்ஞானம் ஆங்கிலம் ஆகிய பாடசாலைகளை ஒன்லைன் மூலம் தரம் 6 தொடக்கம் 11 வரை நடாத்தி வருகின்றார்.

அதன் முன்னேற்றத்தை அளவிட அவர் அவரது குடும்பத்துடன் லுணுகலை ஹொப்டன் நேற்று முன்தினம் வருகை தந்த போது இந்த வரவேற்பு அளிக்கப்பட்டது.

 எழுத்தாணி கனடாவில் இருந்துவந்த அவர்கள் ஹொப்டன் கலைமகள் வித்தியாலயத்தில் மாணவர்கள் பெற்றோர் கூட்டத்தை நடாத்தினர்.
நளினி முத்துலிங்கம் எழுத்தாணி கனடாவில் இணையக் கல்வி மலையக மாணவர்களுக்கு கொடுக்கும் பணிப்பாளர். ஆசிரியை மற்றும் அவர்களின் பெற்றோர் உறுப்பினர்கள் எல்லோரும்  வந்தார்கள்.
 பாடசாலை அதிபர் வடிவேல் நிரோஜன் மேலும் பல வேண்டுகோள் விடுத்தார் ‌.
 அதை அவர்கள் ஏற்றுக் கொண்டனர்.



Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours