( வி.ரி.சகாதேவராஜா)
வரலாற்று
பிரசித்தி பெற்ற நிந்தவூர் மாட்டுப்பளை மடத்தடி ஸ்ரீ மீனாட்சி அம்மன்
ஆலயத்தில் நாக சதுர்த்தி விரத விசேட வழிபாடு ( 8) வியாழக்கிழமை மிகவும்
சிறப்பாக நடைபெற்றது .
ஆலய
பிரதம குரு சிவ ஸ்ரீ சண்முக மகேஸ்வரக் குருக்கள் வழிகாட்டலில் ஆலய குரு
சிவ ஸ்ரீ ச.கோவர்த்தன சர்மா தலைமையில் நாக சதுர்த்தி விரத விசேட வழிபாடு
பூஜை நடைபெற்றது.
ஆலய
பரிபாலன சபை தலைவர் கலாநிதி கே.ஜெயசிறில் தெரிவிக்கையில்.. மீனாட்சி
அம்மன் சந்நிதியில் நாகம் வாழ்கின்ற சிறப்பு மடத்தடியில்தான் அமைந்துள்ளது.
அந்த வகையில் இந் நாகசதுர்த்தி ஆலயத்தில் இன்று சிறப்பாக
அனுஸ்ட்டிக்கப்பட்டுள்ளது. ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு நாக வழிபாடு
செய்தனர். என்று தெரிவித்தார் .
விசேடமாக
அமெரிக்க மனித நேய அமைப்பின் இலங்கை பிரதிநிதி திருமதி சாந்தி சிரஞ்சீவி
பரோபகாரி கனடா( காரைதீவு ) அகிலன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
Post A Comment:
0 comments so far,add yours