கமலி


தவறான தகவல்களை புரிந்து கொண்டு நோயாளர்கள் செயல்படுகின்ற சந்தர்ப்பத்தில் உருவாகின்றன பிரச்சினைகளால் அற்பணிப்புடன் சேவையாற்றுகின்ற வைத்தியர்கள் உட்பட வைத்தியசாலை ஊழியர்கள்மீது நம்பிக்கை இன்மை ஏற்படுகின்றது. என மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் இ.முரளீஸ்வரன் தெரிவித்தார்

களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையில் நோயாளரின் நன்மைகருதி நோயாளர் பாதுகாப்பு மற்றும் சுகாதார தகவல் மையம்("ஹோப்") நிலையம் 19.08.2024 திகதி திறந்து வைக்கப்பட்டது.


குறித்து நிலையானது நோயாளருக்கான பாதுகாப்பு கலாச்சாரம் மற்றும் சுகாதார தகவலகள், வழிகாட்டல், ஆலோசனைகள், அவசரசேவைகள் போன்ற பல விடயங்களை நோயாளருக்கு பெற்று கொடுக்கும் நோக்குடன் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் ஆலோசனைக்கு அமைவாக வைத்தியசாலை அத்தியட்சகர் இ.புவனேந்திரநாதன் அவர்களின் வழிகாட்டலில்  அமைக்கப்பட்ட குறித்த நிலையத்தை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் இ.முரளீஸ்லரன் அவர்கள் கலந்து கொண்டு திறந்து வைத்தார். 

அவர் இந் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்.

நோயாளர்களுக்கான தகவல்களை வழங்குவதிலும் அவர்களுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்துவதிலும்  திறந்து வைக்கப்பட்டுள்ள குறித்தநிலையமானது மிக முக்கியமான பங்களிப்பை செய்ய இருக்கின்றது.

குறித்த ஹோப் நிலையமானது வைத்தியசாலையில் நோயாளர் மத்தியில்  எழுகின்ற பலதரப்பட்ட பிரச்சினைக்கு தீர்வுகொடுக்கின்ற நிலையமாக இவ் நிலையம் அமைந்துள்ளது.

 அதாவது  தவறான தகவல்களை புரிந்து கொண்டு நோயாளர்கள் செயல்படுகின்ற சந்தர்ப்பத்தில் உருவாகின்றன  பிரச்சினைகளால் அற்பணிப்புடன் சேவையாற்றுகின்ற வைத்தியர்கள் உட்பட வைத்தியசாலை ஊழியர்கள்மீது நம்பிக்கை இன்மை ஏற்படுகின்றது. 

இந் நிலையத்தின் ஊடாக சரியான தகவல்கள் வழங்கும் சந்தர்ப்பத்தில் வைத்தியாசாலை சேவையை புரிந்து கொண்டு வைத்தியசாலை மீது மக்கள்  நம்பிக்கை வைத்து செயற்படுவதற்கு வாய்ப்பு ஏற்படும். இதனால் வைத்தியசாலைக்கு உதவிகளும் கிடைக்கக்கூடிய சநதர்ப்பம் உருவாகின்றன.

 இது தவிர மக்களுக்கான வெளி சேவைகள் அதாவது சந்தர்ப்பமும் அதாவது பிரதேச செயலகங்களில் ஊடாக கிடைக்கக்கூடிய உதவிகள் மற்றும் நோயாளர்களுக்கு நன்கொடைகளை பெற்றுக் கொடுக்கின்ற  சந்தர்ப்பங்களும் இந்த நிலையத்தின் ஊடாக செய்து முடிக்க கூடியதாக இருக்கும். இது தவிர நோயாளருக்கு தேவையான மேலதிக சிகிச்சைக்கான வழிகாட்டுதல்களை வழங்குதல். இதனால் பொதுமக்களுக்கும் வைத்தியசாலைக்கும் சிறந்த இணைப்பு உருவாகும்.

எனவே இந்த சிறந்த சேவையை முன்னெடுத்த வைத்தியசாலை பணிப்பாளர் உட்பட  சம்பந்தப்பட்ட அனைவருக்கும் எனது முதற்கண் நன்றிகள். என அவர் இதன் போது தெரிவித்தார்..

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours