எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
தேசிய சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் 350 கைதிகளுக்கு ஜனாதிபதியின் விசேட அரச பொது மன்னிப்பு வழங்கி இன்று விடுதலை செய்யப்படவுள்னர்.
அதற்கு அமைவாக மட்டக்களப்பு சிறையிலிருந்து 11 ஆண் கைதிகள் இன்று (12) திகதி பொது மன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பு சிறைச்சாலையின் அத்தியட்சகர் என்.பிரபாகரன் தலைமையில் இக்கைதிகள் இன்று காலை 10.30 மணியளவில் விடுதலை செய்யப்பட்டனர்.
சிறைச்சாலையின் பிரதம ஜெயிலர் ஏ.பி.வானுக தயான் உள்ளிட்ட சிறைச்சாலை அதிகாரிகளும் இதன்போது கலந்துகொண்டனர்.
சிறுகுற்றங்கள் புரிந்ததன் அடிப்படையில் தண்டனை பெற்றுவந்த கைதிகளே இவ்வாறு பொதுமன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலை அத்தியட்சகர்
தெரிவித்தார்.
ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமையவே இவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப்பேச்சாளர் நேற்று குறிப்பிட்டிருந்தார்.
Post A Comment:
0 comments so far,add yours