நிதாகரன்
பட்டிருப்பு வலயக்கல்வி பணிப்பாளராக மீண்டும் எஸ்.சிறிதரன் இன்றைய தினம்(13) பொறுப்பேற்றுக்கொண்டார்.
மட்/பட்டிருப்பு தேசிய பாடசாலையில் மேலதிக ஆளணியினரை ஆளணியில்லாத பாடசாலைகளுக்கு இடமாற்றம் மேற்கொண்டபோது பட்டிருப்பு பாடசாலையில் மேலதிகமாக இருந்த ஆசிரியர்களும் சில பாடசாலை சமூக அமுக்க குழுக்களும் இணைந்து மாணவர்களையும் பொதுமக்களையும் தூண்டிவிட்டு செய்த ஆர்ப்பாட்டங்களை தொடர்ந்து விசாரணை முடியும்வரை இவரை தற்காலிகமாக இடமாற்றி இருந்தனர்.
இங்கு நடந்த பிரச்சனை மற்றும் இவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்த கல்வி அமைச்சு இவர்மீது குற்றமில்லை என உறுதி செய்து மீண்டும் பட்டிருப்பு வலயக் கல்விப் பணிப்பாளராக நியமித்து உள்ளது.
பட்டிருப்பு வலய பாடசாலைகளின் கல்வி நடவடிக்கை இனிமேல் புத்துணர்ச்சி பெறும் என கல்வி,கற்பித்தல் நடவடிக்கை மீது நாட்டமுள்ள ஆசிரியர்களும் அதிகாரிகளும் நம்பிக்கை வெளியிட்டு உள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் உண்மை நிலமைகளை விளங்கிக்கொள்ளாமல் கல்வியை சீரழிக்கும் சில சங்கங்கள் இனிமேல் பட்டிருப்பு வலயத்தில் இருந்து விரட்டியடிக்கப்படல் வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.
பட்டிருப்பு கல்வி வலயத்தில் கடந்த காலங்களில் இவ்வலயக் கல்விப்பணிப்பாளர் இவ்வலயத்தில் உள்ள சகல பாடசாலைகளிலும் மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளின் அடைவுமட்டத்தை அதிகரிப்பதற்காக பல்வேறு தொழிநுட்ப ரீதியான செயற்பாடுகளை முன்னெடுத்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்க விஷேட அம்சமாகும்.
Post A Comment:
0 comments so far,add yours