இ.சுதா


ஜனாதிபதி ரணில்  செயலணி 2024 கிழக்கு மாகாணத் தலைவரும் தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவருமான க. மோகன் அவர்கள்  துறைநீலாவணை மகாவித்தியாலயத்தின் கல்விச் சமுகத்தினர் மற்றும் ஆலயங்களின் பிரதிதிகள், விளையாட்டுக்கழகங்களின் பிரதிதிகளைச் சந்தித்து ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான விளக்கத்தினை வழங்குவதற்காக துறைநீலாவணைக் கிராமத்திற்கு கள விஜயத்தினை கடந்த ஞாயிற்றுக்கிழமை (1) மாலை மேற்கொண்டிருந்தார்.

இதன் போது பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், பாடசாலையில் காணப்படும் பௌதீக வளப் பற்றாக்குறை பற்றி கூறிய போது அவற்றுள் சிலவற்றை உடனே நிவர்த்தி செய்து தருவதாக உறுதியளித்ததுடன் துறைநீலாவணைக் கிராமத்திலுள்ள விளையாட்டுக்கழகங்களின் தேவையினைக் கேட்டறிந்ததுடன் அவசரமாக பூர்த்தி செய்யக்கூடிய உதவிகளை துரிதமாக நிறைவேற்றுவதாகவும் ஏனைய தேவையினை காலப் போக்கில் செய்து தருவதாகவும் உறுதியளித்தார்.




Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours