( வி.ரி.சகாதேவராஜா)
நீண்ட காலமாக இழுத்தடிக்கப்பட்டு வரும் மயிலந்தனை மாதவனை மேய்ச்சல் தரைப்பிரச்சினையை நான் ஜனாதிபதியாக வந்தவுடன் தீர்த்து வைப்பேன்.
இவ்வாறு
மட்டக்களப்பு கல்லடி சிவானந்த மைதானத்தில் நடைபெற்ற ஐக்கிய மக்கள்
சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் பிரசாரப்பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய
ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசா உறுதியளித்தார் .
இந்தக் கூட்டம் மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட தலைவர் சோ.கணேசமூர்த்தி தலைமையில் கல்லடி சிவானந்தா மைதானத்தி நடைபெற்றது.
ஐக்கிய
மக்கள் சக்தி கட்சியின் பட்டிப்பளை பிரதேச தலைவரும் முன்னாள் தவிசாளரும்
அதிபருமான சிவ.அகிலேஸ்வரன் உள்ளிட்ட கட்சி அமைப்பாளர்களும் கலந்து
கொண்டனர்.
அங்கு அவர் மேலும் பேசுகையில் ..
இதுவரை
முடியாத வீட்டுத் திட்டங்களை நான் வந்தவுடன் முடித்து தருவேன். அதேபோன்று
ஒவ்வொரு பிரதேச செயலகங்களிலும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவதற்கான
ஏற்பாடு செய்வேன். விவசாயிகளுக்கு தரமான உரத்தை ஐயாயிரம் ரூபாவுக்கு பெற்று
தருவேன். அத்துடன் விவசாயம் கடற்றொழில் நவீனமயமாக்கப்படும் என்றார்.
கூட்டத்தில் முஸ்லிம் தலைவர்கள் ரவூப் ஹக்கீம் றிஷாட் பதியுதீன் அமீரலி உள்ளிட்ட பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
Post A Comment:
0 comments so far,add yours