( வி.ரி. சகாதேவராஜா)


சஜித் பிரேமதாசாவுக்கு வாக்களித்தால் கிழக்கிலும் அதிக பன்சலைகள் உருவாகும்.
 சஜித் ஆதரிக்கலாமா என்று சிந்தியுங்கள்.
இவ்வாறு 
 அனுரகுமார திசாநாயக்கா இணைந்த வடக்கு கிழக்கு துண்டாடிய அரசியல்வாதி நீங்கள் விளங்கிக் கொள்ள வேண்டும் என ஜனாதிபதி   தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேந்திரன்   தெரிவித்தார்.

தமிழ் தேசிய பொது கட்டமைப்பின் அம்பாறை மாவட்டத்திற்கான ஜனாதிபதி தேர்தல்  பிரதான பிரச்சாரக் கூட்டம் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு திருக்கோவிலில்  இடம் பெற்றது .  
இக் கூட்டத்திற்கு தமிழ் பிரதேசங்களிலிருந்து ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர். காரைதீவில் இருந்து தாயக செயலணியின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் கே.ஜெயசிறிலின் தலைமையில் பேரூந்தில் வந்திருந்தனர்.

அங்கு அரியநேத்திரன் மேலும் தெரிவிக்கையில்..
  தமிழர்கள் எல்லாரும் ஒன்று பட வேண்டிய தருணம் இது,   இந்த தமிழ் பொது வேட்பாளர் என்ற விடயம் வந்த பிறகு ஜனாதிபதி தேர்தலில் முக்கிய வேட்பாளர்கள் அவர்களது இடங்களில் பிரச்சாரம் செய்யாமல் வடக்கு கிழக்கில் தற்போது நிலை கொண்டுள்ளனர்.   தற்போது பொது வேட்பாளரின் தாக்கம் உணரப்பட்டு வருகின்றது  இடம்பெற உள்ள ஜனாதிபதி தேர்தலில் அவர்களுக்கு விசேட பாடம் ஒன்றை புகட்ட  கடந்த கால ஜனாதிபதிகள் எமக்குச் செய்த துரோகத்திற்கு பரிசாகவே நாம் இந்த முறை சங்கு சின்னத்திற்கு வாக்களிக்கின்றோம் என்ற செய்தி கொடுக்க வேண்டி இருக்கின்றது

இப்போது போட்டியிடுகின்ற ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசா கடந்த காலங்களில் வடக்கு கிழக்கில் நல்லாட்சி காலத்தில் அதிக பன்சலைகளை நிறுவியவர் ஆவர் உங்கள் சஜித் பிரேமதாசாவுக்கு வாக்களித்தால் கிழக்கிலும் அதிக பாண் சாலைகள் உருவாகும் சஜித் ஆதரிக்கலாமா என்று சிந்தியுங்கள்

 அனுரகுமார திசாநாயக்கா இணைந்த வடக்கு கிழக்கு துண்டாடி மாகாண சபையை தேர்தலை நடத்த காரணமாக இருந்தவர் அனுரகுமார  ஆதரித்து வாக்கு கேட்டு வரும் உள்ள அரசியல்வாதிகளின் கோமாளித்தனத்தை நீங்கள் விளங்கிக் கொள்ள வேண்டும்.என்றார்.




Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours