யாழ்ப்பாணம்
நடந்து முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலின் யாழ்ப்பாண மாவட்டத்தின் தபால் மூல வாக்குகளுக்கான முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
இதன்படி, சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 9277 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாச 7640 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
தமிழ் பொது வேட்பாளர் அரியநேத்திரன் 4207 வாக்குகளை பெற்றுள்ளார்.
அனுரகுமார திஸாநாயக்க 2250 வாக்குகளை பெற்றுள்ளார்.
யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதி
நடந்து முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலின் யாழ்ப்பாண மாவட்டத்தின் யாழ்ப்பாணம் தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
தமிழ் பொது வேட்பாளர் அரியநேத்திரன் 7494 வாக்குகளை பெற்றுள்ளார்.
இதன்படி, சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 7,080 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாச 7,058 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க 2,186 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
நல்லூர்
இன்றைய தினம் நடந்து முடிந்த, ஜனாதிபதி தேர்தலின் யாழ்ப்பாண மாவட்டத்தின் நல்லூர் தேர்தல் தொகுதி முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, தமிழ் பொது வேட்பாளர் அரியநேத்திரன் 10097 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 8804 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச 7464 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
தேசிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட அநுர குமார திஸாநாயக்க 3835 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
Post A Comment:
0 comments so far,add yours