நாடளாவிய ரீதியில் இன்று இரவு 10 மணியில் இருந்து நாளை காலை 06 மணிவரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் வெளியான பின்னரே தேவையேற்பட்டால் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று தெரிய வந்துள்ளது.
தேர்தல் ஆணைக்குழுவின் அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புத் த ரப்பின் முக்கிய அதிகாரிகளுக்கு இடையில் இன்று மாலை நடைபெற்ற முக்கிய கலந்துரையாடலின் பின்னர் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.அத்தியாவசிய சேவைகளை முன்னெடுக்கின்ற தரப்பினர் தங்களது நிறுவனங்களால் வழங்கப்பட்டுள்ள ஆவணத்தை அல்லது கடிதத்தை ஊரடங்கு கால பிரவேச ஆவணமாக பயன்படுத்த முடியும் என காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
Post A Comment:
0 comments so far,add yours