எதிர்வரும் 23 ஆம் திகதி (திங்கட்கிழமை) விசேட அரச விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டலுவல்கள் அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2024ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று மாலை நிறைவடைந்திருந்தது.இதற்கமைய தபால் மூல வாக்குகள் எண்ணும் நடவடிக்கைகள் 7 மணிக்கு ஆரம்பமானதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்திருந்த நிலையில் நாளைய தினம் இறுதி முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்தநிலையில், நாளை மறுதினம் விசேட விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post A Comment:
0 comments so far,add yours