(எம்.எஸ்.எம்.ஸாகிர்)


இலங்கையின் பைத்துல்மால் நிதியத்தின் (CBF) 67ஆவது வருடாந்த பொதுக் கூட்டம் அண்மையில் பம்பலப்பட்டியில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

2024/2025 காலப்பகுதிக்கான தலைவராக மீண்டும் ஜனாதிபதி சட்டத்தரணி ஏ.ஏ.எம்.இலியாஸ் மீண்டும் தெரிவு செய்யப்பட்டார். 

2024/2025 ஆம் ஆண்டுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட ஏனைய நிர்வாகிகளாக, உபதலைவராக எம்.எஸ். பௌசுல் ஹக், செயலாளராக ஏ.என். நஸ்வி ரஹ்மான், பொருளாளராக ஏ.எஃப். ஃபெரோஸ் நூன், உப செயலாளராக எஃப்.எம். அசப் கான் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.

தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாக உறுப்பினர்களாக ஏ.எம்.ஏ.நஸ்ரி, ஏ. ஃபஸால் இஸ்ஸதீன், எம் ருஷ்டி டஹ்லான், எஃப்.ஐ. அன்வர், டாக்டர். எம்.ஏ. செய்னுதீன், மொஹிதீன் காதர், ஷர்ஹான் முஹ்சீன், மெஹ்ராஜ் டி சாலி, சுரைஷ் ஹாஷிம், ருமைஸ் மொஹிதீன், இஜாஸ் ஹனிஃப், டாக்டர். ஒஸ்மான் காசிம், எஸ்.ஆர். றழி மற்றும் எம்.எச்.எம். நஸார்  ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டனர்.

இலங்கை பைத்துல்மால் நிதியமானது மருத்துவ தேவைகள், விதவைகள்/அனாதைகள் ஆதரவு, சக்கர நாற்காலி வழங்குதல் மற்றும் ஆதரவற்றவர்களுக்கு மாதாந்திர உதவித்தொகை போன்றவற்றிற்கும் உதவி வழங்கப்படுவது போன்ற இன்னோரன்ன சேவைகளைச் செய்து வருகின்றது.

இந்த உன்னதமான காரியங்களில் பங்கேற்க ஆர்வமுள்ள எவரும், செயலாளரை 0777-630923 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours