8 வயது சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த சந்தேக நபரான 60 வயது நபரை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 14 ஆந்திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சம்மாந்தறை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
26.09.2024 அன்று வீடுகளுக்கு சென்று குர்ஆன் ஓதுவிக்கும் நபரினால் சிறுமி பாலியல் சேட்டைக்கு முகம் கொடுத்த சம்பவம் அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புற நகர் பகுதி ஒன்றில் இடம்பெற்றிருந்தது.
குறித்த சம்பவம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புதிய வளத்தாப்பிட்டி இஸ்மாயில் புரம் பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் இடம்பெற்றிருந்ததுடன் குறித்த சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த 60 வயது மதிக்கத்தக்க சந்தேக நபரை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்து தடுப்பு காவலில் வைத்திருந்தனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் சம்மாந்துறை பொலிஸாருக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை (29) கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமைய சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எஸ் ஜெயலத் வழிகாட்டுதலில் பொலிஸ் நிலைய பெருங்குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி கே.சதீஸ்கர் தலைமையிலான பொலிஸ் குழுவினர் விசாரணை நடவடிக்கைகளை மேற்கொண்டு சந்தேக நபரை கைது செய்திரந்தனர்.
மேலும் குறித்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 8 வயது சிறுமி தற்போது சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றில் கடந்த திங்கட்கிழமை(30) முன்னிலைப்படுத்திய நிலையில் சந்தேக நபரான 60 வயது நபரை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 14 ஆந்திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சம்மாந்தறை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
Post A Comment:
0 comments so far,add yours