(எம்.என்.எம்.அப்ராஸ்)
சாய்ந்தமருது லீட்த வே முன்பள்ளி முன்பள்ளி பாடசாலையில் சிறுவர் தின நிகழ்வுகள்"பிள்ளைகளை பாதுகாப்போம் சமமாக மதிப்போம்" என்ற தொனிப்பொருளில் முன்பள்ளி பணிப்பாளர் ஆசிரியர் ஐ.எம்.உவைஸ் தலைமையில் இன்று (01)இடம்பெற்றது.
இதன் போது பிரதம அதிதியாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பொறியாளர் எம்.ஐ.எம்.றியாஸ் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தார்.
இந்நிகழ்வில் மாணவர்களுக்கான விளையாட்டு போட்டிகள்,சங்கீதக் கதிரை முயலோட்டம் நீர் நிரப்புதல் ஓட்டப்பந்தயம்,பலூன் உடைத்தல் கலைநிகழ்ச்சிகள் மற்றும் மாணவர்களின் தனித்திறமைகள் என்பன பாடசாலையின் அதிபர் எம்.பாத்திமா பர்ஸானா மற்றும் ஆசிரியை எம்.ஜே.எப்.அஜானி ஆகியோர்களின் நெறிப்படுத்தலின் கீழ் நடைபெற்று இறுதியில் மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.
Post A Comment:
0 comments so far,add yours