மட்டக்களப்பு மாவட்டத்தில் மார்பக புற்றுநோயாளர்களின்
எண்ணிக்கை மிகவும் அதிகரித்து செல்கின்றது . முன்னதாகவே கண்டறிவதன் ஊடாகவே
மக்களை இந் நோயில் இருந்து காப்பாற்ற முடியும் என மட்டக்களப்பு மாவட்ட
பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் முரளீஸ்வரன் தெரிவித்தார்.
மார்பக
புற்று நோய் தேசிய விழிப்புணர்வு வாரத்தினை முன்னணி மட்டக்களப்பு மாவட்ட
பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை உத்தியோகத்தர்கள், களுவாஞ்சிக்குடி
ஆதார வைத்தியசாலை உத்தியோகத்தர்கள், களுவாஞ்சிகுடி மற்றும் வெல்லாவெளி
சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக உத்தியோகத்தர்கள், மாவட்ட புற்று நோய்
சங்கத்தினர்,றொட்டரி கழகத்தினர் ஒன்றிணைந்து நேற்று குறித்த விழிப்புணர்வு
ஊர்வலமொன்றினை களுவாஞ்சிகுடி யில் முன்னெடுத்திருந்தனர்.
இதனைத்
தொடர்ந்து களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் இடம் பெற்ற விழிப்புணர்வு
கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்.
மூலம்
மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவது மட்டுமல்லாது இது தொடர்பாக
சுகாதாரத்துறை சார்ந்த உத்தியோகத்தர்களுக்கும் விழிப்புணர்வை
ஏற்படுத்துகின்ற விதமாகத்தான் ஊர்வலம் அமைந்திருக்கின்றது காரணம் ஒவ்வொரு
சுகாதார உத்தியோகத்தர்களும் இந்த விடயத்தில் தூதுவர்களாக இறங்கி பணியாற்ற
வேண்டும் அவ்வாறு பணியாற்றுவதனூடாக உங்கள் குடும்பம் அயலவர்கள்
இந்நோயிலிருந்து காப்பாற்ற முடியும் என்பது எமது நோக்கமாகும்
ஏன்
இவ்வாறான விழிப்புணர்வு நிகழ்வுகளை நாங்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில்
அதிகூடிய கரிசினையுடன் மேற்கொள்கிறோம் என்றால் மட்டக்களப்பு
மாவட்டத்தினை பொறுத்த அளவில் புற்றுநோயாளர்களின் எண்ணிக்கை மிகவும்
அதிகரித்து செல்கின்றது . அந்த அதிகாரிப்பினை இவ்வாறான விழிப்புணர்வு
விடயங்களின் ஊடாக நோயை ஆரம்பத்தில் இருந்து கண்டறிந்து குறைத்துக்
கொள்ளலாம் என்பதே எமது நோக்கமாக இருக்கின்றது.
அதாவது
இந்த மார்பக புற்றுநோயை நாங்கள் கண்டறிந்து அதனை தடுக்க வேண்டுமாக
இருந்தால் பெண்கள் நிச்சயமாக தாங்கள் சுயமாக மார்பக பரிசோதனைகளை மேற்
கொள்ளதல் அல்லது வைத்திய சாலைகளில் இடம்பெறும் மார்பக பரிசோதனைகளுக்கு
செல்ல வேண்டும் வருடத்தில் ஒரு தடவையாவது கட்டாயம் செல்ல வேண்டும்.
அவ்வாறான
நிலைமைகளில் உங்கள் உடலில் ஏதாவது கட்டிகள் தென்பட்டால் தங்கள் அதிகமாக
பயப்பட வேண்டியதில்லை ஆரம்பத்திலே நோயை கண்டறிந்து கட்டுப்படுத்துகின்ற ஒரு
பிரிவு மட்டக்களப்பு புற்றுநோய் வைத்தியசாலையிலே இயங்கி வருகின்றது. இப்
பிரிவிலேயே சென்று இது தொடர்பான ஆலோசனைகளை பெற்றுக் கொள்ள முடியும் இப்
பிரிவானது ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் இதற்கான வைத்தியர்கள் அந்த
பிரிவிலே சிகிச்சை அளிப்பதற்காக காத்துக் கொண்டிருக்கின்றார்கள்.
அதுமாத்திரமின்றி
நலிவடைந்த வேர்களின் சிகிச்சைக்கு பணரீதியான உதவிகளை மேற் கொள்வதற்கு
உதவியை மேற்கொள்பவர்களாக மட்டக்களப்பு மாவட்டத்தில் புற்றுநோயாளர்
சங்கங்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றது இதற்கு மேலதிகமாக வெளிநாட்டவர்கள்
காத்துக் கொண்டிருக்கிறார்கள் எனவே தாங்கள் தயக்கமின்றி இந்த சிகிச்சையை
பெற்றுக் கொள்ள முடியும் என அவர் இதன் போது தெரித்தார்...
Post A Comment:
0 comments so far,add yours