( வி.ரி.சகாதேவராஜா)
அம்பாறை
மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் சார்பில் பிரபல சமூக
செயற்பாட்டாளர் வெள்ளையன் வினோகாந்த் ஒரேயொரு தமிழ் வேட்பாளராக தெரிவாகி
போட்டியிடுகின்றார்.
இடம்பெறவிருக்கும்
2024 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்பு மனுவில் நேற்று
முன்தினம்.2024.10.09 முதலாவதாக கையொப்பமிட்டுள்ளார்..
கொழும்பில் அமைந்திருக்கும் ஐக்கிய மக்கள் கூட்டணி காரியாலயத்தில் இந் நிகழ்வு இடம்பெற்றது.
ஐக்கிய
மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸவின் நேரடி சிபார்சில் தமிழ்
மக்களுக்காக அதிக சேவைகளை எதிர்காலத்தில் செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன்
ஒரே ஒரு தமிழ் வேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
கட்சியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார அதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தார்.

Post A Comment:
0 comments so far,add yours