மூதூர் கல்விவலயத்திற்குட்பட்ட மல்லிகைத்தீவு மகாவித்தியாலய மாணவி தேசிய மட்ட பளுதூக்குதல் போட்டியில் பங்கு பற்றி சாதனை படைத்துள்ள செல்வி மதியழகன் யோமிசாந்தினி அவர்கள் பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வு அதிபர் எஸ்.கணேசன் தலைமையில் வியாழக்கிழமை பாடசாலையில் பாடசாலை சமூகத்தினரால்  நடாத்தப்பட்டது

. இந்நிகழ்வில் தேசிய விருதுகளை வென்றுள்ள திருகோணமலை நகர பாடசாலைகள் மற்றும் சாம்பல் தீவு போன்ற பாடசாலைகளில் இருந்து இப்போடியில் பங்கு பற்றிய மேலும் 6 தேசிய மட்ட வீராங்கனைகளும் பாராட்டி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

இம் மாணவர்கள் கிழக்கு மாகாணத்தின் முதற்தரப் பயிற்றுவிப்பாளர் உமாசுதன் அவர்களிடம்  மிகக் குறுகிய கால பயிற்சினைப் பெற்று அவருடைய மாணவர்களுடன் இணைந்த வகையில் போட்டியில் பங்குபற்றி பாடசாலைக்கும் எமது பிரதேசத்திற்கும் பெருமை சேர்த்துள்ள இவரை  பாடசாலை சமூகம் பாராட்டிக்கௌரவித்தது

இந்நிகழ்வில் அயல் பாடசாலைகளின் அதிபர்களும் ,கிராம அபிவிருத்திச் சங்கம், பாடசாலை அபிவிருத்திச் சங்கம், மாதர் சங்கம் ,பழைய மாணவர் சங்கம் ,மற்றும் விவசாய சம்மேளனம் விளையாட்டு கழகங்கள் ,ஆலய பரிபால சபையின் உறுப்பினர்கள் என பலரும்  கலந்து  கொண்டனர்.

இதன் போது மாணவியின் பயிற்சிகளுக்கு உதவும் வகையில் கலாநிதி ஸ்ரீஞானேஸ்வரன் அவர்கள்  2ஆயிரம்  ரூபா வீதம் 10 மாதங்களுக்கு உதவித் தொகை வழங்க முன்வந்துள்ளமை பாராட்டுக்குரியதாகும்.

இந் நிகழ்வுக்கு ஒத்துழைப்பு வழங்கிய  பழைய மாணவர்கள் பெற்றோர்கள் மற்றும் கிராம அபிவிருத்தி சங்கம் மாத சங்கம் மாணவர்கள் ஆசிரியர்கள் ஆகயோருக்கு எமது பாடசாலை சமூகத்தின் சார்பில் மனமார்ந்த நன்றிகளை அதிபர் தெரிவித்துள்ளார் 












Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours