நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான அறிமுக நிகழ்வானது தம்பிலுவில் கிராமத்தில் இன்றயதினம் (18) நடைபெற்றது.
இதன்போது அம்பாறை மாவட்டத்தில் எமது தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் படகு சின்னத்தில் வேட்பாளர்களாக போட்டியிடும் அற்புதலிங்கம் விஸ்கரன், கோமளராசா லோகிதரூபன், கணேசசுந்தரம் குலமணி, தெட்சணாமூர்த்தி நவநீதராஜ், ஓய்வு நிலை பொறியியலாளர் தேவராசா சர்வானந்தன், பகிரதன் சுகிர்தன், முத்துக்குமார் விக்னேஸ்வரன், வெள்ளையன் மோகன், செல்வநாயகம் ரசிகரன், சோமநாதன் விபுலாநந்ததாஸ் உள்ளிட்ட பத்து வேட்பாளர்களும் தங்களை அறிமுகம் செய்து வைத்திருந்தனர்.
இந் நிகழ்வில் எமது கட்சியின் பிரதம பொருளாரர் ஆறுமுகம் தேவராசா பிரதி செயலாளர் இணைப்பாகம் வை. சந்திரகுமார் அம்பாறை மாவட்ட செயற்குழு உறுப்பினர் பிரபாகரன் உட்பட கட்சியின் அம்பாறை மாவட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
Post A Comment:
0 comments so far,add yours