தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியினால் கிழக்கு மாகாணத்தில் தொடர்ச்சியாக தேர்தல் காரியாலயங்கலானது திறந்து வைக்கப்பட்டு  வரும் நிலையில் அதன் ஒரு அங்கமாக கட்சியின் முக்கியஸ்தர் மதிரூபன் தலைமையில் மட்டு புதூர் பிரதேசத்தில் மற்றொரு தேர்தல் காரியாலயம் (19) திறந்து வைக்கப்பட்டது.



இந்நிகழ்வில் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு மேற்படி தேர்தல் பரப்புரை காரியாலயத்தினை திறந்து வைத்திருந்தார்.  

இந்நிகழ்வில் வேட்பாளர்களான சண்முகலிங்கம் சுரேஸ்குமார், இசடோர் ஜோசப் அன்ரனி கமலராஜா, லியோன் சுஜித் லோறன்ஸ், மகளிர் அணி செயலாளர் திருமதி சுஜிகலா அருள்தாஸ் உட்பட கிராமிய மட்ட அமைப்புக்களின் நிர்வாகிகள் கட்சியின் ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.











Share To:

Thaayman

Post A Comment:

0 comments so far,add yours