சா.நடனசபேசன்
சம்மாந்துறை கல்வி வலயத்திற்குட்பட்ட நாவிதன்வெளிக் கோட்டத்தில் அமைந்துள்ள கணேஷாவித்தியாலயத்தில் ஆசிரியர் தின நிகழ்வு பெற்றோர்களது ஒத்துழைப்புடன் அண்மையில் அதிபர் திருமதி கார்த்தியாயினி துரைலிங்கம் தலைமையில் இடம்பெற்றதுஇந்நிகழ்வுக்கு அதிதிகளாக வலுவூட்டப்பட்ட பாடசாலை மேம்பாட்டு உத்தியோகத்தர் எஸ்.பிரகதீஸ்வரன் மற்றும் கே.ரூபன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
இதன்போது ஆசிரியர்கள் அனைவரும் தங்களது திறமைகளை வெளிப்படுத்தியதுடன் ஆசிரியர் அனைவருக்கும் நினைவுச்சின்னம் அதிபரால் வழங்கிவைக்கப்பட்டது.
இதேவேளை பாடசாலையின் இவ் ஆண்டுக்கான சிறந்த ஆசிரியராக எம்.மகாலிங்கம் ஆசிரியர் தெரிவுசெய்யப்பட்டு அதிபரினால் பாராட்டிக் கௌரவிக்கப்பட்டமை விசேட அம்சமாகும்.
Post A Comment:
0 comments so far,add yours