சமூகத்தில் நல்ல தலைவர்களை உருவாக்கும் பொறுப்பு அரச அதிகாரிகளின் வழிப்படுத்தலிலும் அர்ப்பணிப்பான செயற்பாட்டிலும் தங்கியுள்ளது அப்போதுதான் பாடசாலைகளில் இருந்து நாட்டிற்கும் சமூகத்திற்கும் சிறந்த தலைமைத்துவங்களை உருவாக்கமுடியும் என வீதிகள், நெடுஞ்சாலைகள் அமைச்சின்மேலதிக செயலாளர் வேதநாயகம் ஜெகதீசன் தெரிவித்தார்
சம்மாந்துறை கல்வி வலயத்திற்குட்பட்ட வேப்பையடி கலைமகள் மகாவித்தியாலயத்தில் (ஐ.ஓ.எம்) நிறுவனத்தின் உதவிமூலம் 2 மில்லியன் செலவில் நிர்மானிக்கப்பட்ட மலசலகூடத்தினை மாணவர்களது பாவனைக்கு கையளிக்கும் நிகழ்வும் 1.4 மில்லியன் செலவில் போட்டோப்பிரதி மற்றும் பாடசாலைக்கான உபகரணங்களும் கையளிக்கும் நிகழ்வு பாடசாலையின் அதிபர் கே. தியாகராஜா அவர்களின் ஒழுங்கமைப்பிலும் நாவிதன்வெளி பிரதேசசெயலாளர் திருமதி ராகுலநாயகி சஜிந்திரன் தலைமையில் 18 ஆம்திகதி வெள்ளிக்கிழமை இடம்பெற்றது
இந்நிகழ்வில் சம்மாந்துறை வலயக்கல்விப் பணிப்பாளர் எஸ்.மகேந்திரகுமார் இழப்பீடுகளுக்கான அலுவலகத்தின் பணிப்பாளர் திருமதி அனுராதி பெரேரா சமூக ஒற்றுமை மற்றும் நல்லிணக்கப்பிரிவு புலம்பெயர்தலுக்கான சர்வதேச அமைப்பின் தலைவர் திருமதி கிரிஜா சிவகுமார் இழப்பீடுகளுக்கான உதவிப்பணிப்பாளர் அருன்பிரதீபன் அம்பாரை மாவட்டசெயலகத்தின் இழப்பீடுகளுக்கான உத்தியோகத்தர் எம்.ஆர் ஆஸாத் ஆகியோர் கலந்துசிறப்பித்ததுடன் நன்றியுரையினை பாடசாலையின் அதிபர் கே.தியாகராசா நிகழ்த்தினார்
அதேவேளை பாடசாலைக்கான போட்டோக்கொப்பி இயந்திரம் உட்பட 1.4 மில்லியன் பெறுமதியான உபகரணங்களை பாடசாலை அதிபர் மற்றும் பெற்றோர்களிடம் ஒப்படைத்தமை குறிப்பிடத்தக்கது
இந்நிகழ்வில் அதிதியாகக் கலந்துகொண்டு பேசுகையில் மேற்கண்டவாறுதெரிவித்தார்
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்; ஒரு சமூகத்தின் தேவைகளைப் பெற்றுக்கொள்வதற்கும் நிறைவேற்றுவதற்குமான கருவியாக கல்வி திகழ்கின்றது இதனை மாணவர்களாகிய நீங்கள் சரியான முறையில் பெற்றுக்கொண்டு சமூகத்தின் தேவைகளை நிறைவேற்றவேண்டும் இவ்வாறான தேவைகளை நிறைவேற்றுவதற்காக சமூகத்தில் சிறந்த கல்வியலாளர்களை உருவாக்கும் பொறுப்பு அதிபர் மற்றும் ஆசிரியர்களது கைகளில் உள்ளது.
வேப்பையடி கலைமகள் மகாவித்தியாலயத்தினைப் பொறுத்தமட்டில் 2004-2009 வரை நாவிதன்வெளிப் பிரதேசசெயலகத்தில் உதவிப்பிரதேசசெயலாளராக இருந்தபோது நன்கறிந்திருந்தேன் இங்கு வளப்பற்றாக்குறையுடன் இயங்கும் இப்பாடசாலைக்கு இவ் உதவி வழங்கியுள்ளமை பாராட்டுக்குரியது இதற்காக (ஐ.ஓ.எம்) நிறுவனத்தினருக்கும் அதற்கு உதவிய அனைவரையும் பாராட்டுவதுடன் இப்பாடசாலையின் அதிபர் தியாகராஜா மற்றும் ஆசிரியர் குலந்திரன் ஆகியோரின் பாரிய அர்ப்பனிப்பு பாராட்டுக்குரியது என்றார்
Post A Comment:
0 comments so far,add yours