தேர்தல் கடமைகளுக்கு சமுகமளிக்காத அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இவ்வாறு கடமைக்கு வரத் தவறும் அதிகாரிகளிடம் இருந்து 1 இலட்சம் ரூபா தண்டப் பணம் அறவிடப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 

தேர்தல் கடமைகளுக்கு சமுகமளிக்குமாறு நியமனக் கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ள சகல அதிகாரிகளும் கடமைகளுக்கு கண்டிப்பாக வருகை தருவது அவசியம்.எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தேர்தல் கடமைகளுக்காக நியமனக் கடிதத்தை பெற்றுக் கொண்டுள்ள அதிகாரிகள், கடமைக்கு வருகை தரத் தவறும் பட்சத்தில், ஒரு இலட்சம் ரூபா தண்டப் பணம் அறவிடப்படும்.

சம்பந்தப்பட்ட சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு அவர்களுக்கு இத்தண்டனை வழங்கப்படும்.

தபால் மூல வாக்களிப்புக்கு விண்ணப்பித்திருக்காமை, மற்றும் விண்ணப்பத்தை நிராகரித்திருந்தமை என்பவை தேர்தல் கடமைகளிலிருந்து விடுவிப்பதற்கான காரணமல்ல.

Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours