( வி.ரி. சகாதேவராஜா)


இந்துக்களின் கந்த சஷ்டி விரதம் இன்று (2) சனிக்கிழமை ஆரம்பமாகிறது.
தொடர்ந்து ஆறு நாட்கள் விரதம்  அனுஷ்டித்து ஆறாம் நாளாகிய 07 ஆம் திகதி வியாழக்கிழமை சூரசம்ஹாரம் இடம் பெறும்.

வரலாற்று பிரசித்தி பெற்ற திருக்கோவில்  சித்திர வேலாயுத சுவாமி ஆலயத்தில் கந்த சஷ்டி விரதம் வழமைபோல் இன்று(2) சனிக்கிழமை ஆரம்பமாகிறது.

 ஆலயத்தலைவர் சுந்தரலிங்கம் சுரேஷ் தலைமையில், ஆலய பிரதம குரு சிவஸ்ரீ சண்முக மகேஸ்வர குருக்கள் மற்றும்  ஆலயகுரு சிவசிறி அங்குசநாதக்குருக்கள் முன்னிலையில் விரதம் 
அனுஷ்ட்டிக்கப்படவிருக்கிறது.

 கந்தசஷ்டி விரதம் 07 ஆம் தேதி சூர சம்ஹாரத்துடன் நிறைவு பெறுகின்றது.

வழமைக்கு மாறாக ஏராளமான பக்தர்கள் விரதத்தினை இம்முறை அனுஷ்டிக்க இருக்கின்றனர்.

இவ்வருடம் கந்தசஷ்டி விரதத்திற்கான சஷ்டித்திதி 06 ஆம் தேதி புதன்கிழமை முன்னிரவு  10.18 க்குகூடி மறுநாள் 07 ஆம் தேதி வியாழக்கிழமை  முன்னிரவு 9.35 மணிக்கு கலைகிறது என்று பிரதம குரு சிவஸ்ரீ சண்முக மகேஸ்வரக்குருக்கள் தெரிவித்தார்.
ஆகவே விரதாதிகள் அதற்கேற்ப நடந்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டிருக்கிறார்.
மறுநாள் 8 ஆம் தேதி வெள்ளிக்கிழமை திருக்கல்யாணம் நிகழ்வுடன் விரத உற்சவம் நிறைவுபெறும் என்று ஆலய பரிபாலன சபையின் செயலாளர் அ.செல்வராஜா தெரிவித்தார்.
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours