பட்டிருப்பு
கல்வி வலயம் இம்முறை புலமை பரிசீல் பரீட்சை பெறுபேறானது சென்ற வருடத்தினை
விட 10 வீதத்தினால் அதிகரித்துள்ளது இதற்காக பாடுபட்ட அனைவருக்கும் எனது
பாராட்டுக்கள் என பட்டிருப்பு வலயக்கல்வி பணியாற்றினார் சிவானந்தம்
சிறிதரன் அவர்கள் தெரிவித்தார்.
மட்டக்களப்பு
ஓந்தாச்சிமடம் விநாயகர் மகாவித்தியாலயத்தின் சாதனையாளர் பாராட்டுவிழா
வித்தியாலய அதிபர் திருமதி பிரபாகரன் மதிவதனி தலைமையில் நடைபெற்றது இந்த
நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்.
சாதித்த
மாணவர்களை மீண்டும் தொடர் சாதனை புரிவதற்கும் அதற்காக துணைநின்ற ஆசிரியரை
பாராட்டுவதும் மிக சிறந்த விடயம் நாங்கள் கடந்த 2023 ஆம் ஆண்டிலிருந்து
2023க்கு முன்னர் எமது வலயத்தில் ஐந்தாண்டுகளிலிருந்து வலையத்தில்
விடுபட்டிருந்த ஆசிரியர்களையும் மாணவர்களையும் நாங்கள் இரண்டு கட்டமாக
சாதனையாளர் பாராட்டு விழாவை ஏற்பாடு செய்து பாராட்டியிருந்தோம்.
இதையெல்லாம்
ஏன் நாங்கள் செய்கின்றோம் என்றால் இந்த சிறிய சிறிய வெற்றிகள்தன் நாளை
பெரிய பெரிய சாதனையாளர்களை உருவாக்குவதற்கு உந்து சக்தியாக இருக்கிறது.
சின்ன சின்ன நல்ல விடயங்களை நாங்கள் கண்டு மாணவர்களாக இருக்கட்டும்
ஆசிரியர்களாக இருக்கட்டும் அதிபர்களாக இருக்கட்டும் அதனை பாராட்டுவது மிக
முக்கியமான விடயமாகும்.
நான்
எவரிடம் நல்ல விடயங்களை காண்கின்றனோ அவர்கள் அனைவரையும் நான்
மகிழ்ச்சியாகவும் மனதாரவும் பாராட்டுவேன். இவ்வாறான பாராட்டுக்களூடாக
நாங்கள் பலதரப்பட்ட விடயங்களை சாதிக்க முடியும்.
உங்களுக்கு
தெரியும் கடந்த 2023 ஆம் ஆண்டு எங்களுடைய வலையமானது புலமை பரிசில்
பரீட்சை யில் 68% இருந்த பெறுபெற்றினை ஆசிரியர்களும் அதிபர்களும் எமது
உத்தியோகத்தர்களும் இணைந்து மாணவர்களுக்கு செய்த பணி காரணமாக இந்த முறை
79.3 விதமாக உயர்ந்துள்ளது. சரியாக 10 வீதத்திற்கு மேல் பார்சல் ஒன்றினை
மேற்கொண்டுள்ளீர்கள். இந்த பாய்ச்சலை உருவாக்குவதற்கு உழைத்த அனைவரையும்
நான் பாராட்டுகிறேன். என அவர் இதன்போது தெரிவித்தார்
Post A Comment:
0 comments so far,add yours