எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
மண்முனை மேற்கு பன்சேனை கிராம அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் பன்சேனை கிராம அபிவிருத்தி அமைப்பின் தலைவர் கமலநாதன் ரகுகரன் தலைமையில் தனியார் விடுதியில் இன்று (22) இடம் பெற்றது.
இந் நிகழ்வின் பிரத அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் கலந்து சிறப்பித்தார்.
2017ஆம் ஆண்டிலிருந்து அன்புநெறி கனடா அமைப்பினர் பன்சேனை கிராம வளர்ச்சி திட்டத்தில் குறிப்பிடத் தகுந்த முன்னேற்றத்தை மேற்கொண்டுள்ளனர்.
பன்சேனை கிராமத்தில் மருத்துவம், கல்வி, சமூக பொருளாதாரத்திலான முன்னேற்றங்களை அன்புநெறி கனடா தன்னார்வ தொண்டு நிறுவனத்தினரினால் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
இதன் போது அன்பு நெறி கனடா அமைப்பினரினால் பயனடைந்தவர்களை கெளரவிக்கவும், வெற்றிகளை தெரியப்படுத்துவதற்கும் எதிர்கால அபிவிருத்தி செயற்திட்டம் தொடர்பாக கலந்தாலோசிக்கப்பட்டது.
இந் நிகழ்வில் மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் திருமதி நமசிவாயம் சத்தியானந்தி, அன்புநெறி கனடா தன்னார்வ தொண்டு நிறுவன உப செயலாளர்கள் சிவக்கொழுந்து வேணு, மண்முனை மேற்கு வலய கல்வி பணிப்பாளர் யோ. ஜெயச்சந்திரன், பன்சேனை பாரி பாடசாலை அதிபர் தே.பவலசிங்கம், பன்சேனை விவசாய அமைப்பின் தலைவர் ஐ. பாஸ்கரன் மற்றும் உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
Post A Comment:
0 comments so far,add yours