எஸ்.எஸ்.அமிர்தகழியான் மட்டக்களப்பு
இலங்கை
நாட்டுக்கான ஜப்பானிய தூதுவர் அக்கியோ இசோமட்டா உள்ளிட்ட தூதுவராலய
அதிகாரிகள் குழுவினர் இன்று (22) திகதி மட்டக்களப்பிலுள்ள பல
சுற்றுலாத்தலங்கள் உள்ளிட்ட சமய தலங்களையும் பார்வையிட்டுள்ளனர்.
இதன்
போது குறித்த தூதுவர் உள்ளிட்ட குழுவினர் மட்டக்களப்பில் உள்ள மிகவும்
பழமை வாய்ந்த சுற்றுலாத் தலமாக திகழும் ஒல்லாந்தர் கோட்டையை
பார்வையிட்டதுடன், மட்டக்களப்பின் சிறப்பம்சங்கள் தொடர்பாகவும் கேட்டறிந்து
கொண்டதுடன், மட்டக்களப்பு மாவட்டத்திற்கான தமது விஜயம் தொடர்பில் தாம்
மகிழ்ச்சியடைவதாகவும் தெரிவித்துள்ளனர்.
Post A Comment:
0 comments so far,add yours