(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

சாய்ந்தமருது அரசினர் முஸ்லிம் கலவன் பாடசாலையின் (GMMS) தரம் ஒன்றுக்கு புதிதாக மாணவர்களை வரவேற்கும் வித்தியாரம்ப விழா "புதியவர்களின் நாள்" எனும் தொனிப்பொருளில் பாடசாலையின் புதிய கேட்போர் கூடத்தில் இன்று (30) வியாழக்கிழமை இடம்பெற்றது.

கல்லூரியின் அதிபர் எம்.ஐ.எம். இல்யாஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் கண் வைத்திய அதிகாரி டாக்டர் நஸ்ரின் சாஜிதா கமால் நிஸாத் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டதோடு, கௌரவ அதிதியாக பொறியியலாளர் எம்.சீ.கமால் நிஸாத் மற்றும் ஆரம்பக் கல்வி ஆசிரிய ஆலோசகர் எஸ்.எம்.எம். அன்சார் ஆகியோர் நிகழ்வில் கௌரவ அதிதிகளாகவும் கலந்து சிறப்பித்தனர்.

பாடசாலையின் பழைய மாணவரும் அக்கரைப்பற்று வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பொறியியலாளருமான எம்.ஐ.எம்.ரியாஸ்,  நிகழ்வில் அதிதியாகக் கலந்து கொண்டார்.

தரம் இரண்டு மாணவர்களால் புதிய மாணவர்கள் மாலை அணிவித்து இனிப்பு வழங்கி வரவேற்கப்பட்டனர்.

பிரதி அதிபர், உதவி அதிபர் உட்பட பகுதித்தலைவர்கள், ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்தி குழுவினர், பழைய மாணவர் சங்கத்தினர் மற்றும் நலன் விரும்பிகள் முதலாம் தரத்திற்கு புதிதாக இணைத்துக் கொள்ளப்பட்டுள்ள புதிய மாணவர்கள், பெற்றோர்கள் எனப் பலரும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.


Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours