( வி.ரி.சகாதேவராஜா)
மண்முனை
தென் எருவில்பற்று பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கான 'கிளீன்
ஸ்ரீலங்கா' திட்டம் தொடர்பிலான கலந்துரையாடல் நேற்று முன்தினம் நடைபெற்றது.
"அழகான
நாடு ...புன்னகைக்கும் மக்கள்" எனும் கருத்திட்டத்தின் கீழ் 'கிளீன்
ஸ்ரீலங்கா' திட்டம் தொடர்பில் பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கு
தெளிவூட்டும் கலந்துரையாடல் நிகழ்வானது நேற்று முன்தினம்(21) பிரதேச
செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்னம் தலைமையில் பிரதேச செயலக
மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
இதன்
போது 'கிளீன் ஸ்ரீலங்கா' திட்டத்தின் முக்கிய அம்சங்களான சூழல்சார்
நிலைபேறானதன்மை, சமூக திறன் மேம்பாடு, ஆட்சி நிலைபேறானதன்மை மற்றும்
பொருளாதார நிலைபேறானதன்மை ஆகியனவற்றை மேம்படுத்தல் தொடர்பாகவும், அவற்றை
அடைவதற்கான இலக்குகள் மற்றும் செயற்பாடுகள் தொடர்பாக உத்தியோகத்தர்களுக்கு
தெளிவூட்டப்பட்டது.
அத்துடன் 'கிளீன் ஸ்ரீலங்கா' திட்டத்தின் அடிப்படையான விடயங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
மேலும்
அரசாங்க உத்தியோகத்தர்கள் அனைவரும் பொது மக்களின் நோக்கங்களை பூர்த்தி
செய்வதற்கு அர்ப்பணிப்புடன் வினைத்திறனாக பணியாற்றவேண்டும் எனவும் பிரதேச
செயலாளர் அவர்களினால் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
Post A Comment:
0 comments so far,add yours