பாறுக் ஷிஹான் அஸ்லம் எஸ்.மெளலானா
இலங்கை ஒலிபரப்பாளர் ஒன்றியத்தின் ஆதரவில் ஏ.ஆர்.எம். அர்ட்வடைசிங் அனுசரணையில் சிரேஷ்ட ஒலி /ஒளிபரப்பாளர் அறிவுக்களஞ்சியப் புகழ் அதிபர் மர்ஹூம் அல்ஹாஜ் ஏ.ஆர்.எம். ஜிப்ரி அவர்களின் 05 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வும், றிஸாலத் இணைய தொலைக்காட்சியின் சேவை விஸ்தரிப்பும் சாய்ந்தமருது அல்-ஹிலால் வரவேற்பு மண்டபத்தில் இலங்கை ஒலிபரப்பாளர் ஒன்றிய தலைவர் ஒலி/ஒளிபரப்பாளர், சிரேஷ்ட ஊடகவியலாளர் யூ.எல். யாக்கூப் தலைமையில் இன்று (02) நடைபெற்றது.
மேலும் சிறப்பு அதிதிகளாக கிழக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குழு செயலாளர் ஜே. லியாக்கத் அலி, கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் கே.எம்.ஏ. ரஸாக், கல்முனை வலயக்கல்விப் பணிப்பாளர் எம்.எஸ். சஹ்துல் நஜீம், சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம். ஆஸிக், மன்னார் பொது வைத்தியசாலை பணிப்பாளர் டாக்டர் அஸாத் எம். ஹனீபா, அம்பாறை பிரதம பொறியியலாளர் ஏ.எம். சாஹீர், பிறை வானொலி பிரதிப் பணிப்பாளர் பஷீர் அப்துல் கையூம், சிரேஷ்ட ஒலி /ஒளிபரப்பாளர் சட்டத்தரணி ஏ.எம். தாஜ் உட்பட அரசியல் பிரதிநிதிகள், கல்விமான்கள், ஊடக ஆளுமைகள், இலக்கியவாதிகள், ஊடக அமைப்புக்களின் பிரதானிகள், மர்ஹூம் அல்ஹாஜ் ஏ.ஆர்.எம். ஜிப்ரி அவர்களின் குடும்பத்தினர் என பலரும் கலந்து கொண்டனர்.
Post A Comment:
0 comments so far,add yours