கமல்


மட்டக்களப்பு   களுவாஞ்சிக்குடி மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளராக இலங்கை நிருவாக சேவையில்  முதலாம் தரத்தினைச் சேர்ந்த உருத்திரன் உதயஸ்ரீதர் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கமைய அவர்   உத்தியோக பூர்வமாக தனது கடமைகளைப்  அதாவது 03.02.2025 பொறுப்பேற்றுள்ளார்.


காரதீவை பிறப்பிடமாகக் கொண்ட இவர் 2003 ஆம் ஆண்டு இலங்கை நிருவாக சேவையில் இணைந்து கொண்டு வெல்லாவெளி, செங்கலடி, காத்தான்குடி ஆகிய இடங்களில் பிரதேச செயலாளராக கடமையாற்றி நிருவாக சேவையில்  சுமார்  இருபத்தொரு வருடங்கள்  அனுபவம் வாய்ந்தவராவார்.

இந் நிலையில்   காத்தான்குடி  பிரதேச செயலாளராக கடமையாற்றி கொண்டிருந்த  வேளை   வருடாந்த இடமாற்றத்திற்கு அமைய அவர் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலக பிரிவுக்கு  பிரதேச செயலாளராக  நியமிக்கப்பட்டுள்ளார். 
மண்முனை தென் எருவில் பற்றில் ஏலவே  பிரதேச செயலாளராக கடமையாற்றிய திருமதி.சிவப்பிரியா வில்வரெத்தினம் அவர்கள்  மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு  பிரதேச செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்..
Share To:

Battirep News

Post A Comment:

0 comments so far,add yours