பாறுக் ஷிஹான்
ஐஸ் போதைப் பொருளுடன் சந்தேகத்திற்கிடமாக நடமாடிய சந்தேக நபரை திருக்கோவில் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
இந்தச் சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை(2) இரவு அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புறநகர் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
திருக்கோவில் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் சோதனை நடவடிக்கை மற்றும் வீதி ரோந்து நடவடிக்கையின் போது கல்முனைக்குடி 10 பகுதியை சேர்ந்த 44 வயது சந்தேக நபர் ஐஸ் போதைப் பொருளுடன் கைதானார்.
இவ்வாறு கைதான சந்தேக நபர் வசம் இருந்து 1 கிராம் 280 மில்லி கிராம் ஐஸ் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் சந்தேக நபர் மற்றும் சான்றுப் பொருள்கள் யாவும் சட்ட நடவடிக்கைக்காக நிந்தவூர் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மேலும் இது தொடர்பான மேலதிக விசாரணைகள் திருக்கோவில் விசேட அதிரடிப் படையினரினால் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post A Comment:
0 comments so far,add yours