(சுமன்)
எதிர்வரும்
உள்ளூராட்சிமன்ற தேர்தலில் கோறளைப்பற்று பிரதேச சபையில் கிழக்குத் தமிழர்
கூட்டமைப்பின் சார்பில் படகுச் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு
ஆதரவளிக்கும் முகமாக தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும்,
முன்னாள் பிரதியமைச்சருமான கருணா அம்மான் என்று அழைக்கப்படும்
விநாயகமூர்த்தி முரளிதரன் பிரச்சாரப் பணிகளை முன்னெடுத்து வருகின்றார்.
கிழக்கு
தமிழர் கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் ஆதரவாளர்களால்
மிகவும் சிறப்புடன் மேற்கொள்ளப்பட்டுவருகின்ற நிலையில் கோறளைப்பற்று பிரதேச
சபைக்குட்பட்ட கிரான் கிழக்கு, மேற்கு வட்டாரத்தின் படகுச் சின்ன
வேட்பாளரான சரவணமுத்து ஜீவானந்தன் அவர்களை ஆதரித்து மக்களை வீடுவீடாக
நேரில் சந்திக்கும் முகமாக கருணா அம்மானால் இப்பிரச்சாரப் பணிகள்
முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


Post A Comment:
0 comments so far,add yours